/ கதைகள் / அன்றும்... இன்றும்... என்றென்றும் நீ...! (பாகம் – 2)
அன்றும்... இன்றும்... என்றென்றும் நீ...! (பாகம் – 2)
முன்ஜென்ம சம்பவங்களும், நவீன கால நிகழ்வுகளும் கலந்து வெளிப்படும் காதல் காவிய நுால்.காட்டு வழியாக இளம் பெண்ணுடன் ஒரு ஆண், கோவிலை நோக்கி செல்கிறான். கோவிலை சுற்றிவிட்டு காத்திருக்கின்றனர். இவர்கள் யார், எதற்காக, யாருக்காக காத்திருந்தனர் என சுற்றிச் சுழல்கிறது. அந்த செயல் மற்றவர் பார்வையில் சட்டத்தை மீறுவதாக தெரிந்தாலும் உகந்த விடை கூறப்பட்டுள்ளது. காதல், நட்பு கலந்த இலக்கணத்தை சொல்கிறது. காட்டுக்குள், அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பரபரப்பை தந்து திகிலுாட்டுகிறது. காதலில் துரோகம் இருந்தால், எந்த திசையை நோக்கி இழுத்து செல்லும் என்பதை உணர்த்தும் நாவல். – டி.எஸ்.ராயன்