/ அரசியல் / ஆன்மிக அரசியல்

₹ 200

ஆன்மிகம், ஆகமம், சனாதனம், வருணாசிரமம் பற்றிய கேள்விகளுக்கு, தெள்ளத் தெளிவாக பதில் தரும் நுால். கோவில் அபகரிப்பு, பூணுால் அறுப்பு, நாத்திகரை ஆலயத்திலிருந்து அகற்றுதல், அறநிலையத் துறை அத்துமீறல் போன்ற பொருட்களில் விவாதத்தால் விடை சொல்கிறது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இருந்து அரசு ஆண்டுக்கு 600 கோடிக்கு மேல் எடுத்துக்கொண்டு, 6 கோடி ரூபாயை வழங்குவதாக கூறுகிறது. 99 சதவீதம் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என்ற தகவலையும் தருகிறது.அறநிலையத் துறை, கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறி அதற்கு முடிவு கட்ட கோருகிறது. பிராமணர் அல்லாத சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளதை குறிப்பிடுகிறது. வடமொழியும், தென்தமிழும், பூசைக்கும், வழிபாட்டுக்கும் ஏற்ற மொழி என்பதை உரையாடலில் வெளிப்படுத்துகிறது. அதிரடி வினாக்களுக்கு, எதார்த்தமான, சட்டப்பூர்வ சரவெடி பதில்கள் சொல்வதில் சாணக்கியரை விஞ்சி நிற்கிறது.– முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை