/ ஆன்மிகம் / அன்னை அபிராமி நிகழ்த்திய அற்புதங்கள்!
அன்னை அபிராமி நிகழ்த்திய அற்புதங்கள்!
அமாவாசையை பவுர்ணமியாக்க திருக்கடையூர் பட்டருக்கு அருள் புரிந்த அபிராமி பற்றிய அற்புத நுால். இறைவன் தோன்றி அருள் பாலிப்பதை அற்புதமாக காட்டி அழகுற விவரிக்கப்பட்டுள்ளது. அந்தாதி பாடல்களில் குறிப்பிடத்தக்கவற்றை தேர்ந்தெடுத்து, மிக நேர்த்தியாக பக்தர்கள் மனதில் பதியும் வண்ணம் விளக்க உரை தரப்பட்டுள்ளது. இடைநிறுத்தம் இல்லாத கல்வியும், நிறை வாழ்வும், கெடுக்காத நட்பும், எடுக்க குறையாத செல்வமும் என, வாழ்வின் தேவைகள் விவரிக்கப்பட்டுள்ளன. போற்றும் பாடல்களின் சுவையும் உணர்த்தப்பட்டுள்ளது. இலக்கியம் காட்டும் வாழ்வியல் உண்மையை தெரிவித்துள்ளது. அபிராமி பக்தர்கள் படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன்