/ கட்டுரைகள் / அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் – 4)
அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் – 4)
தமிழக நிகழ்வுகளை உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ள நுால். தமிழில் முதல் பெண் இதழ் குறித்த தகவல் உட்பட, 45 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.நிகழ்ந்தவற்றை திரும்பி பார்ப்பது சுவாரசியம் தரும். இதுவும் அது போன்ற சுவை ஊட்டுகிறது. தமிழக செயல்பாடுகள் கவனத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரலாற்று பதிவுகளும் உள்ளன. அந்த காலத்திய பீடி விளம்பரத்தை ரசனையுடன் சொல்கிறது. விளம்பரத்தின் நகலும் இடம் பெற்றுள்ளது.தமிழில் முதலில் அரங்கேறிய நாடகங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. தமிழக பத்திரிகைகளில் வெளியான விளம்பரம் மற்றும் செய்திகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் அற்புத நுால்.– ராம்