/ வரலாறு / அன்று சொன்னது...
அன்று சொன்னது...
142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 239) ஒரு நூலை எடுத்தால், அதை முழுமையாக எத்தனை பேர் வாசித்து முடிக்கின்றனர் என்பது கேள்விக்குறி தான். நாம் படிக்காது விடுகின்ற பக்கங்களில், எத்தனையோ சுவையான செய்திகள் பதிந்து கிடக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரே நூலில் 78 நூல்களின் சாரத்தைச் சுருக்கி அளித்தால், எவ்வளவு உபயோகமாக இருக்கும்? அதைத்தான் இந்த நூலில் செய்துள்ளார் கவிஞர் ஜீவபாரதி. கல்வி வள்ளல் பச்சையப்ப முதலியார் சரிதம் துவங்கி, உலகளாவிய தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், ஆன்மிக தத்துவ வரலாறுகள் ஆகிய பல்வேறு வகை நூல்களை வாசித்து, அவற்றிலிருந்து அரிய செய்திகள் பலவற்றைத் தொகுத்தளித்துள்ளார்.