/ கட்டுரைகள் / ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதி செய்திடுவோம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதி செய்திடுவோம்
உணர்ச்சி கருத்துகளின் தொகுப்பு நுால். அமைதியாகவும், காட்டாற்று வெள்ளம் போன்றும், பேரருவியாகவும் வடிவம் தருகிறது. ஏழைகளுக்கு சலுகைகள் தர வேண்டும் என்பதை அனைவரும் ஏற்கும் வகையில் புரட்சிகரமாக கூறப்பட்டுள்ளது. ஏழை – பணக்காரன் என இரு பிரிவுகள் போதும், சாதிப் பிரிவினை வேண்டாம் என்கிறது.சுரண்டுவதற்கா சுதந்திரம் என்ற கருத்து புதையல் சாட்டையைச் சுழற்றுவது போல் உள்ளது. சமுதாயச் சீர்கேட்டை தயக்கமின்றி தாக்கி, மக்கள் நல்வாழ்வுக்கு வேண்டியதை துணிந்து பதிவிட்டுள்ளது. படிக்க வேண்டிய தொகுப்பு நுால்.– டாக்டர் கார்முகிலோன்