/ கதைகள் / அப்பா அன்புள்ள அப்பா
அப்பா அன்புள்ள அப்பா
எழுத்தாளர் சுஜாதாவின் இளமைக்கால படைப்புகளின் தொகுப்பு நுால். சைக்கிள் கற்றுக்கொள்வது, கணினியை தெரிந்து கொள்வது உள்ளிட்ட அனுபவங்கள் துணுக்குகளாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு படைப்பிலும் தனித்துவ முத்திரைகளை காண முடிகிறது. கதைகளில் குறும்புகளுக்கு பஞ்சமில்லை. இலக்கியம், கவிதை, அறிவியல் என படைப்புகளில் நையாண்டியான மொழி நடை கவர்ச்சியுடன் உள்ளது. சென்னை பேச்சோ, செம்மை மொழியோ, அறிவியல் மொழியோ என எந்த வகை படைப்பிலும் தனித்துவம் தெரிகிறது. ஆற்றங்கரை நெடுக செண்பக பூக்கள் பூத்தது போல் துள்ளலான நடையில் உள்ளது. மனம் கவரும் படைப்புகளை படித்து செல்லும்போது மகிழ்ச்சி மலர்கிறது. இனிய அனுபவம் தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




