/ கவிதைகள் / அரங்கில் மலர்ந்த கம்பன்
அரங்கில் மலர்ந்த கம்பன்
நூலாசிரியரின் இலக்கியப் பணியின் பொன் விழா வெளியீடாக வந்துள்ள இந்நூலில், அவர் பங்கேற்ற கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டு உள்ளன. கம்பன் கண்ட கருணை, பக்தி, சமுதாயம், மரவுரி, அரசியல் மாண்பு, வாலி, கணையாழி, அனுமன், கைகேயி, கம்பன் ஒரு தெய்வம் போல, பல தலைப்புகளில், பல்வேறு சான்றோர் தலைமையில் அரங்கேறிய கவிதைகள் இதில் அடக்கம்.‘தன்னையே இறைவனுக்குத்தானளித்தால் தானய்யாஅன்னையாய் வந்திருந்துஅருட்பாலைச் சுரந்திடுவான்’(பக். 36) என பக்தி நெறியூட்டி,‘பேயாகக் கைகேயிபெயரைச் சிலர் மாற்றிடினும்தாயாகப் போற்றி அவள்தாள் பணிந்து நின்ற மகன்’(பக். 153) என, ராமனுடைய பெருமையை உணர்த்தும் பல பாடல்கள், கவிஞரின் ஆற்றலை உணர்த்துபவை.– பின்னலூரான்