/ ஆன்மிகம் / அறத்தினுள் அன்பு நீ

₹ 375

அறிந்து வியந்த தகவல்களை தொகுத்து, சுவாரசியமாக படைக்கப்பட்டுள்ள நுால். துவக்கத்தில் மனித உடல் இயக்கத்திற்கு பங்காற்றும் ‘வைட்டமின் டி’ பற்றிய வியப்புகள் பதிவிடப்பட்டுள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு துணை நிற்பதை இயற்கையாக பெறுவது பற்றி வழிகாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் செல்கள் என்ற உயிரணுக்களின் தொகுதியே என்று கூறுகிறது. அது எவ்வாறு இருக்கும்; பாதிக்கப்பட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதை கூறுகிறது. ஆண், பெண் வேறுபாட்டிற்கான உயிரணுக்கள் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. நன்மை, தீமை பாக்டீரியா பற்றிய விளக்கம் அருமை. வைரஸ் கிருமிகள் விபரம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. நரம்பு செயல் குறைபாடு நோய் பாதிப்பும் தரப்பட்டுள்ளது. – முகில்குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை