/ கதைகள் / அர்ச்சனாவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் – நாவல்
அர்ச்சனாவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் – நாவல்
முக்கோண காதல் கதையாக அமைக்கப்பட்டுள்ள நாவல். சின்ன சொற்றொடர்கல் கதையை நடத்திச் செல்கிறார் ஆசிரியர். பீஹார் இளைஞனான கட்டடக் கலைஞன் ஒரு பக்கம். இன்னொரு புறம் கலெக்டராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவன். அங்கு பணியாற்றும் பெண். இருவரும் காதல் வசப்படுவதை மையமாக கொண்டுள்ளது. கலெக்டர் நல்லவன் என்பது போல கதையை நகர்த்தி முகமூடியை கிழிக்கிறார். பிறகு கதாநாயகி தன்னை காதலித்த பீஹாரியை மணக்கிறாள். ஒருதலைக் காதல் என்றாலும் உத்தமம் என வித்தியாசமாக முடிகிறது. சம்பவங்களை காட்டாமல் கதை நகர்த்தப்பட்டுள்ளது.– சீத்தலைச் சாத்தன்