/ இலக்கியம் / அறிவுக் குஞ்சுகள் (தொகுதி – 2)

₹ 160

எதிர்கால சமுதாயம் பொறுப்போடும் சிறப்போடும் விளங்க அறிவுரை கூறும் நுால். வளரும் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை, ஒற்றுமை உணர்வு, சேவை மனப்பான்மை போன்ற உயர்ந்த குண நலன்கள் வளர கருத்தாழமிக்க பாடல்கள் நிறைந்துள்ளன. இளைய தலைமுறை செம்மை ஆகிவிட்டால், நாளைய சமூகம் பலமோடும் விளங்கும் என்கிறது. இந்த குறிக்கோளை நெஞ்சில் நிறுத்தி, எழுதியுள்ள எழுச்சி பாடல்கள் நிறைந்துள்ளன. விஞ்ஞான வளர்ச்சியில் எதுவும் சாத்தியம் என்கிறது. மழைக்கால எச்சரிக்கையாக, ‘மழையின் ஊடே மரத்தடியில் நின்றால் உயிரைப் பறித்திடுமே, மனதில் இதை பதித்து மரத்தின் மறைவில் ஒதுங்காதீர்...’ என்கிறது. வளரும் பருவத்தில் வாசிக்க வேண்டிய கருத்து கருவூலம். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை