/ சுய முன்னேற்றம் / அறிவுரு தமிழ்த் தூதர் ஆதிசேசய்யா
அறிவுரு தமிழ்த் தூதர் ஆதிசேசய்யா
கல்வி மற்றும் பொருளாதார அறிஞர் மால்கம் ஆதிசேசய்யாவின் பணிகளை தொகுத்து அறிய தரும் நுால். அயராத உழைப்பில் உலக அளவில் புரிந்த சாதனைகளை விளக்குகிறது. கல்வி பொருளாதார துறையில் தனித்துவத்துடன் செயல்பட்டவர் ஆதிசேசய்யா. கடும் முயற்சியல் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களை உருவாக்கியவர். யுனஸ்கோ நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர். உலக அளவில் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த முயன்றார்.இவரது அரிய செயல்களையும் அவற்றால் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக விளக்குகிறது. அந்த பணிகள் தொடர்பான கருத்துகளை முறைப்படுத்தி, ஏழு இயல்களாக பதிவு செய்துள்ளது இந்த நுால். உலக அளவில் பல்வேறு மாற்றங்களுக்கு விதை போட்ட அறிஞரை பற்றி அறிய உதவும் நுால்.– ஒளி