/ ஆன்மிகம் / அற்புதத்தில் அற்புதம்

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது. என்று இயேசு சொல்கிறார். நீதிக் கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது. விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது. மரம் இருக்கிறது. இதுதான் கடவுளின் பேரரசு. இதுவே விண்ணரசு. அதை எங்கோ தேடுகிறீர்கள்; வேதனைப்பட்டுத் தேடுகிறீர்கள். கடவுளின் பேரரசை நீங்கள் காண விரும்பினால், நீங்கள் விதையாக மாறி அழிய வேண்டும். அப்போது சட்டென மரம் தோன்றிவிடும். நீங்கள் இருக்க மாட்டீர்கள்.ஆனால் கடவுள் இருப்பார். நீங்கள் சிறையாகிவிட்ட விதைகள். புத்தர் ஒரு வி‌தை. இயேசு ஒரு விதை. ஆனால், அவர்கள் சிறைகளாகி விடவில்லை. வித்தும் ஓடும் தகர்ந்து மரமானவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை