/ ஆன்மிகம் / அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்

₹ 220

அருணகிரிநாதர் வாழ்க்கையை வடித்து தரும் நுால். புத்தகம் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் வாழ்க்கை வரலாறு மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இறைவன் நினைப்பதை மனிதன் மாற்ற முடியாது என்பதற்கு, அவரது வாழ்க்கையே உதாரணமாக தரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவிலில் தற்கொலைக்கு முயன்ற மண்டபம் சிறப்புடன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. ‘விதி என்பது தடைக்கல் என்றால், மதி என்பது படிக்கல்’ என்பதாக உரைக்கிறது. அருணகிரிநாதர் சமாதி, திருவண்ணாமலை மேலக்கோபுரம் அருகே உள்ளதை காட்டுகிறது. துன்பம் இயற்கையானது. அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும் என்கிறது. முக்திக்கு முயற்சிப்பது தான் பிறவி பயன் என்றுரைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ