/ ஆன்மிகம் / அருந்தமிழில் பகவத் கீதை
அருந்தமிழில் பகவத் கீதை
அர்ச்சுனனின் அச்சம் போக்கி, கடமைக்கு முன்னே பந்த பாசத்தை துாக்கி எறியெனக் கண்ணன் உபதேசித்த கீதை நுால். அர்ச்சுன விசாத யோகம் துவங்கி, மோட்ச சன்னியாச யோகத்தில் முடிகிறது. சாங்கிய யோகத்தில் இன்ப துன்பங்களை கடக்கவும், பற்று இன்றி பணியாற்றவும் வழிகாட்டுகிறது. கர்ம யோகத்தில் எந்த தொழிலையும் பற்று இன்றி செய்யக் கற்பிக்கிறது. திருமந்திரம், சித்தர் பாடல் மேற்கோள்களும், விளக்கப் படங்களும் துணையாகின்றன. தமிழில் வந்துள்ள மதிப்புமிகு நுால்.– முனைவர் மா.கி.ரமணன்