/ வாழ்க்கை வரலாறு / அருந்ததியர் வாழும் வரலாறு

₹ 560

அருந்ததியர் இன மக்களின் தோற்றம் மற்றும் பண்பாட்டு தொன்மை பற்றி ஆய்வு செய்து தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். முறைப்படுத்தப்பட்ட ஆய்வு மூலம் ஆவணங்களை கண்டறிந்து தந்து நிறுவுகிறது.அருந்ததியர் மக்கள் பற்றிய தகவல்களுடன் முதலில் அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து வாய்மொழியாக பேசப்படும் வரலாறு தகவல்களை ஆராய்ந்து விபரங்களை தருகிறது. பெயர், இனம், வீரர் வரலாறு என வகைப்படுத்தி தந்துள்ளது. அடுத்து, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு மற்றும் பெருந்தெய்வ வழிபாடு பற்றிய விபரங்களை கூறுகிறது.பண்பாட்டு கூறுகள் பற்றி விரிவாக தகவல்கள் தரப்பட்டுள்ளன. சமூக பொருளாதார நிலை, அரசியல் நிர்வாகம் குறித்த விபரங்களையும் தருகிறது. அருந்ததியர் இன மக்களின் வரலாற்றை அறிய உதவும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை