/ கதைகள் / ஆசைக்கோர் அளவில்லை
ஆசைக்கோர் அளவில்லை
மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்து அல்லல்படும் சூழலை புலப்படுத்தும் நாவல். அழுத்தமான கதையோட்டம், பொருத்தமான களங்கள், காட்சி நகர்வுகள், எளிமையான உரையாடல்கள் வலு சேர்க்கின்றன. கவர்ச்சியான பெயரோடு தொடங்கப்படும் நிதி நிறுவனங்கள், பாமரர் பலவீனத்தை அறிந்து ஏமாற்று வலையில் சிக்க வைப்பதை விவரிக்கிறது. நிதி மோசடியால் பணத்தை இழப்போர் எதிர்கொள்ளும் இன்னல்கள், பணத்தை மீட்டு பெறுவதற்கு படும்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காவல் நிலையம், நீதிமன்றம் என அலைக்கழித்து அமைதியை இழக்கும் உளவியலை விவரிக்கிறது. பேராசையால் மெத்த படித்தவர்களும் தன்னிலை மறந்து தவறு நோக்கிச் சென்று அலைக்கழிவதை சுட்டிக்காட்டும் நாவல். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




