/ வரலாறு / அசோகர் பேரரசின் காலமும் பெருமையும்
அசோகர் பேரரசின் காலமும் பெருமையும்
அசோகரின் பட்டத்தரசி அசந்திமித்ரா இறந்த பின் திஷ்யரஷிதாவைப் பட்டத்தரசியாக்கினார். திஷ்யரஷிதா தன் கணவன் புத்த சமயத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டினைக் கண்டு வெறுத்து, அதன் காரணமாய் போதி மரத்திற்கு இடையூறு (விஷமுள்ளால் குத்தி பட்டுப் போக) செய்திருக்க வேண்டும் (பக்:37) மகாவம்சம் கூறும் பல கதைகளையும், ‘மூன்றாண்டிற்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுவதும் இருந்தது என்பது கலிங்க ஆணையால் அறியப்படுகிறது. (பக் 57) (தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது) இப்படி அசோகருடைய கற்பாறை ஆணைகள், கற்றூண் ஆணைகள் (கல்வெட்டுகள்) வெளியிடப்பட்ட கால ஆராய்ச்சிகள் பற்றியும் ஆதாரங்களோடு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய நூலாகும்.பின்னலூரான்