/ வாழ்க்கை வரலாறு / ஆதித்த கரிகாலன்
ஆதித்த கரிகாலன்
ஒன்பது கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு சோழர்கள் கதை; இரண்டு மாவீரன் சிவாஜியின் கதை. இரண்டு ராமாயணக் கதை. இரண்டு அக்பர் பாதுஷா கதை. ஒன்று மட்டும் இன்றைய காலக்கதை.‘தாபம் தீர்த்த சாபம்’ என்ற சிறுகதை ஆச்சரியம் வருகிறது. குழந்தைகளே கிடைக்காதோ என ஏக்கத்தில் இருக்கும் தசரதனுக்கு முனிவர், ‘நீ இறக்கும் போது உன் அருகில் உன் பிள்ளைகள் இருக்க மாட்டர்...’ என சாபம் கொடுக்கிறார். தசரதனுக்கு ஏக சந்தோஷம். ரிஷியின் சாபம் கலக்கத்தை போக்கியது. வருத்தத்தில் சந்தோஷம் தரும் கதைகளின் தொகுப்பு நுால்.– சீத்தலைச் சாத்தன்