/ கட்டுரைகள் / அதுவும் இதுவும்
அதுவும் இதுவும்
எளிய மனிதர் மனதில் சிந்தனைகள் கட்டமைக்கப்படுவது பற்றிய நுால். அன்றாடம் எண்ண ஓட்டங்கள் எப்படி அமைகின்றன என்பதை சித்தரிக்கிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம். இருந்த போதும், பழைய பழக்க வழக்கங்களில் இருக்கும் உயர்ந்த பண்புகளை தக்க வைப்பது மாண்பை காக்கும் என வலியுறுத்துகிறது. இறைவனுடன் மனிதன் போட்டி யிடுவதே விதிக்கும், மதிக்கும் இடை யிலான யுத்தம் என சுட்டிக்காட்டுகிறது. பழமையில் இருக்கும் புனிதங்களை போற்றுவதுடன், தகாதவற்றை ஒதுக்க துணிவது தான் நல்ல இயல்பு என்ற கருத்தை உரைக்கும் நுால். – ஊஞ்சல் பிரபு




