/ பெண்கள் / அவள் இவள் உவள்
அவள் இவள் உவள்
ஆண்களின் ஆதிக்க சிந்தனையின் ஊடே வாழும் சாதாரண பெண்களை கதாபாத்திரமாக்கியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து நடத்திய விவாதக் கருத்துகளின் தொடர்ச்சியாக மலர்ந்துள்ளது. தங்களுக்கான வாழ்க்கையை புரிந்து கொள்ளாத பெண்களே கதையில் பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளது. ஒரு கதையில் கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ முயல்கிறாள் ஒரு கூலி பெண். கணவனுடன் அனுசரித்துப் போவதே சரி என சமூகம் அவளுக்கு போதிக்கிறது.அன்றாடம் கடக்கும் கசப்புள்ள அனுபவங்கள் மையக் கருத்தாக சொல்லப்பட்டுள்ளன. மிகையற்ற எளிய நடையிலான சித்தரிப்பு கவனத்தை கவர்கிறது. இதுவே, புத்தகத்தின் அடிநாதத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. – மதி