அழகு முருகனின் ஆலயங்கள்
வைதாரையு ம் வாழ வைக்கும் முருகப் பெருமானுக்கு தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்கள் சிலவற்றிலும் கோவில்கள் உண்டு. கருணைமிக்க அந்த தெய்வத்தை முருகன் என்று அழைக்க காரணம், அவர் அழகாக இருப்பதால்தான். முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று பொருள். அந்த அழகு என்ற சொல்லை தலைப்பாக கொண்டு இந்த புத்தகம் வெளியாகி உள்ளது. அழகன் முருகன் ஆறுபடை வீடுகள் மட்டுமின்றி, புகழ்பெற்ற பல கோவில்களில், அருளாட்சி செய்து வருகிறார். இந்த வகையில் தமிழகத்தில் உள்ள 13 முருகன் திருத்தலங்களின் வரலாறு இதில் அடங்கியுள்ளது. இது தவிர விமானப்படை வீரர்களால், பஞ்சாப் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒரு கோவில் வரலாறும் இருக்கிறது. ஆக, 14 திருக் கோயில்களின் வரலாறு இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் களுக்கு ஏற்கனவே சென்று வந்தவர்கள் கூட, ஓ இங்கு இவ்வளவு விசேஷம் இருக்கிறதா இவற்றை பார்க்க தவறிவிட்டோமே என்று மீண்டும் அவர்களை அந்த கோவில்களுக்கு செல்லத் தூண்டும் வகையில் ஒவ்வொரு தகவலும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது. இந்த கோவில்களின் சிறப்பம்சங்களை காண்பதற்கு வாசகர்களை கைகோர்த்து அழைத்துச் செல்கிறார் நூல் ஆசிரியர் பி சுவாமிநாதன். முருகப்பெருமானின் ஆலயங்கள் பற்றி அரிய தகவல்கள் அடங்கிய புத்தகம் இது. – தி. செல்லப்பா




