/ கவிதைகள் / அழியாத காதலின் ஆலயம்
அழியாத காதலின் ஆலயம்
ஆசிரியர் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி மட்டும் அல்ல, பன்முகவித்தகர். தன் மனைவி மறைவுக்கு, ஆங்கிலத்தில் இரங்கல் கவிதை எழுதி, அதை வானதி நூலாக வெளியிட்டிருக்கிறது. அந்த கவிதைகளை ஷ்யாமா தமிழாக்கம் செய்திருக்கிறார். மனைவி பத்மா மறைவால் துயருற்று சுந்தரம் எழுதிய கவிதைகள், பல இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு கவிதையில், "ஒளிந்தும் மறைந்தும் கிடக்கின்ற என்பாதை,எதுவென்றுதெரியவில்லை என்று எழுதியுள்ளார்.மனைவியைப் போற்றி புகழும் கணவர், தமிழகத்தில், மிகக் குறைந்த அளவே இருக்கலாம். ஆனாலும், கவிதை பாடி வித்தியாசமாக காட்சியளிக்கிறார் ஆசிரியர். அவரது நண்பர்கள் பலரும் இக்கவிதைகளை புகழ்ந்து எழுதி உள்ளதும், இதில் பதிவாகியுள்ளது சிறப்பாகும்.