பாபா இருக்க பயம் ஏன்?
ஸ்ரீ சாயி மார்க்கம். 2-ஏ/2,தாராசந்த் மெயின்ரோடு, விருகம்பாக்கம் , சென்னை-600092. போன்: 98403 25245, 42550604 ஷீரடி சாயிபாபா பற்றிய பல்வேறு தகவல்களை கொண்ட நூல்கள் ஒன்பது ஒட்டு மொத்தமாக தரப்பட்டிருக்கிறது. இதில் சாயிமதம் என்று லட்சுமி நரசிம்மன் எழுதிய புத்தகமும் உண்டு. ஆசார சீலர் கிடையாது பாபா, ஆனால் அவைகளுக்கு அப்பாற்பட்டவர் ஷீரடிபாபா. அவர் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தங்கள் குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை புறந்தள்ளி அதிகமாக ஈர்க்கப்படும் சக்தியாக இப்போது பாபா வழிபாடு இருக்கிறது. தமிழகத்திலும் பாபாவின் கோவில்கள் அதிகரித்து வருகின்றன. அதில் ஷீரடி போல வழிபாடும் நடக்கிறது. இந்த நேரத்தில் இத் தொகுப்பு ஷீரடி பாபா யார், அவரது அருட் தன்மை என்ன, சாயி இயக்கம் எப்படி அதிகரித்து வருகிறது என்ற பல்வேறு வினாக்களுக்கு விடை தரும் நூல்கள் இவை.