/ ஆன்மிகம் / பகவத் கீதா சிம்பிளிபைடு & ஆர்ட்டிகில்ஸ் எக்ஸ்புளோரிங் ஸ்ரீ கிருஷ்ணா (ஆங்கிலம்)
பகவத் கீதா சிம்பிளிபைடு & ஆர்ட்டிகில்ஸ் எக்ஸ்புளோரிங் ஸ்ரீ கிருஷ்ணா (ஆங்கிலம்)
பகவத் கீதையை நான்கு பகுதிகளாக பிரித்து எளிமையாக தரும் நுால். முதல் பகுதியில், அர்ச்சுனன் தடுமாற்றம் மற்றும் யோகா குறித்த செய்திகள் உள்ளன. இரண்டாவதாக, யோகாவில் ஈடுபாடு மற்றும் வேத விளக்கங்கள் உள்ளன. அடுத்து, தியானம், சத்துவ, ரஜ-, தாமச குண விளக்கம் உள்ளது. படைப்பின் கோட்பாடும், கிருஷ்ணர் பற்றிய செய்திகளும் உள்ளன. தியானத்துடன் கூடிய யோகம், பாவங்களைப் போக்கும் என்கிறது. மனிதர்கள், தெய்வம் மற்றும் அசுரத்தன்மை என வகை பிரிக்கிறது. மாயை, சன்னியாச விளக்கம் உள்ளது. பகவத் கீதையை ஆங்கிலத்தில் அறிய உதவும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து