/ கட்டுரைகள் / பாரதி: தாக்கமும் தாக்கும்
பாரதி: தாக்கமும் தாக்கும்
மகாகவி பாரதி பற்றிய ஆராய்ச்சியாக கணக்கற்ற தகவல்களை தாங்கி களஞ்சியமாக திகழும் நுால். தமிழால் பாரதி தகுதி பெற்றதும், பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும் கூறப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்டம், நதி நீர் இணைப்பு திட்டம் பற்றி எல்லாம் அப்போதே பாடியதை குறிப்பிடுகிறது. பாரதி பாடல்களுக்கு, பரதநாட்டிய வடிவமைப்பு தந்த ருக்மணி தேவி அருண்டேல் குறித்தும் அறிய தருகிறது. காதல் திருமணத்தையும், கலப்பு திருமணத்தையும், விதவைகளின் மறுவாழ்வு திருமணத்தையும் ஆதரித்து, மாபெரும் தீர்க்கதரிசி என்று உணர வைக்கிறது. காய்தல் உவத்தல் இன்றி, நடுநிலைமையோடு, மகாகவி பாரதி பற்றி ஆராய்ச்சி தகவல்கள் நிறைந்துள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்




