/ கட்டுரைகள் / காந்திஜியின் கனவு நனவாகட்டும்
காந்திஜியின் கனவு நனவாகட்டும்
சபாநாயகர் செல்லப்பாண்டியன் அறக்கட்டளை வெளியீடு, 335, லட்சுமணசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. (பக்கம்: 144.)இந்நூலின் தலைப்புக்கு ஏற்றாற்போல் இந்நூலில், தொகுக்கப்பட்டுள்ள பல கட்டுரைகளில் காந்திஜியின் கனவு இழையோடி உள்ளது.தெற்கே பறக்கட்டும் வெண்புறா என்ற தலைப்பில் "சாதி வெறி அபாயகரமானது' என்ற கருத்து விளங்க வைக்க அவ்வையார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் மற்றும் கடவுளர்களில் முருகனையும், சிவனையும் குறித்து வெளியிட்டுள்ள கருத்து சிந்திக்கத்தக்கது.அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து கட்டங்கள் - ஐந்து கடமைகள் என்ற கட்டுரை ஒரு பாடமாகும்.