/ கட்டுரைகள் / ஓ... என் இனிய உலகமே!
ஓ... என் இனிய உலகமே!
ஆரூர்தாஸ். வெளியீடு: நிவேதிதா பதிப்பகம், எண்.1, 3வது மாடி, 13வது தெரு, புதூர், அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 128). திரைப்படத் துறையில் ஐம்பதாண்டுக் காலத்திற்கு மேல் வசனகர்த்தாவாக பிரகாசித்த ஆரூர்தாஸ். அண்மைக் காலமாக புத்தகங்கள் எழுதி வருகிறார். இந்த புத்தகத்தில் 22 கட்டுரைகள் உள்ளன. நவக்கிரக ஆலயங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். நோவா பேழை பற்றியும் எழுதியிருக்கிறார். வால்மீகி குறித்தும் ராவணன் குறித்தும் எழுதியுள்ளவை மிக நன்றாக உள்ளன. "கோட்களும் குணாதிசயங்களும்' என்ற கட்டுரை மூலம் வாசகர்களை அசத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.