/ பொது / பிஸினஸ் ரகசியங்கள்
பிஸினஸ் ரகசியங்கள்
கற்பகம் புத்தகாலயம், 50/18, ராஜாபாதர் தெரு, பாண்டி பஜார், சென்னை-600 017. தொழில் முனைவோராக விரும்பும் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். அதுமட்டும் அல்ல. தற்போது தொழில் துறையை நடத்துவோரும் அதற்கு உறுதுணையாய் இருப்பவர்களும் படிக்க பல விஷயங்கள் உள்ளன. "ரஜினி ஸ்டைலில் வளையத்தை வீசுவதை வைத்து நல்ல தொழிலதிபராக முடியுமா' என்று ஆசிரியர் (பக்கம் 19ல்) விளக்கியிருப்பது அருமை. இது போல தரம் என்ற தலைப்பில் "ஒரு ஆட்டுக்கு, ஒரு மாடு கலக்கும் வித்தை' நல்ல அனுபவத்தின் வெளிப்பாடு.ஆசிரியர் கணக்காயர், வங்கி அனுபவம் கொண்டவர், அத்துடன் தமிழிலும் தன்கருத்தை விளக்கத் தெரிந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.