/ கவிதைகள் / காக்கை குருவி எங்கள் சாதி (கவிதை நூல்):

ஞானகிருஷ்ணா பதிப்பகம், ஜி1, ஸ்ரீமாதவா, 20, 29வது தெரு, நங்கநல்லூர், சென்னை61. (பக்கம்: 121. விலை: குறிப்பிடவில்லை) மரபுக்கவிதை தாய் ப்பால் என்றால், புதுக்கவிதை புட்டிப்பால் எனலாம். சிலசமயம் புட்டிப்பாலும் தேவையாகத் தானே இருக்கிறது. இந்நூல் புதுக் கவிதை என்றாலும், நல்ல கவிதைத் தரம் மிக்க கருத்துக்கள் உடைய நூல். தெய்வம் என்ற தலைப்பில், "விளையாட்டும் அவனே!விளையாடுபவனும் அவனே!விதியும் அவனே!விதியின் வினையும் அவனே!என்று இறைவன் தன்மையை விளக்குவது மிக அருமை.குடை என்ற தலைப்பில்,திருமணம் ஒன்றுக்குப் போய்க் கொண்டிருந்தேன்திடீரென மழை பிடித்துக் கொண்டதுசுறுசுறுப்பாய் குடையை விரிக்க எண்ணினேன்சுத்தமாய் மறந்து விட்டேன் குடை கொண்டு வர!(எனக்கு ஞாபக மறதி அதிகம்)திரும்பி வரும்போதும் நல்ல மழை தான்!தெப்பமாய் நனைந்து போயிருந்தேன்குறும்புப் பார்வையோடு மனைவி கேட்டாள்"குடையை வைத்துக் கொண்டு நனைந்து வருவானேன்?'(எனக்கு ஞாபக மறதி அதிகம்)என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.மொத்தம் 89 கவிதைகள் கொண்ட அருமையான நூல்.


முக்கிய வீடியோ