/ பொது / இணையான பழமொழிகள் (தமிழ்-ஆங்கிலம்-தமிழ்)

₹ 25

எங்மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96, விலை: ரூ.25.) அனுபவங்களில் இருந்து பிறந்தவை பழமொழிகள். நிறைய பேசி புரிய வைக்க முடியாத விஷயத்தை, ஒரு சிறிய பழமொழி, "சட்டென'ப் புரிய வைத்துவிடும். அதுதான் பழமொழிகளின் சிறப்பம்சம். பழமொழிகளுக்கு நமது தமிழில் பஞ்சமே இல்லை. சுவையான பழமொழிகளையும், அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில், பழமொழிகள் சுட்டிக்காட்டும் உண்மையான அர்த்தம் விளக்கப்படாமல், மேம் போக்கான மொழி பெயர்ப்பாக மட்டுமே தந்திருப்பது சிறிய நெருடல்!


முக்கிய வீடியோ