1000 Points in Child Care
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்:124 விலை: ரூ.50) ஏழெட்டுக் குழந்தைகள் பிறந்தாலும் அவை எல்லாவற்றையும் பேணி, சீராட்டி, பராமரித்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் வாழ்ந்த பூமிதான் இது. ஆனால், இன்று ஒரு குழந்தையைப் பெற்று அதை வளர்ப்பதையே, பெரும் சுமையாகக் கருதும் பெற்றோர்களே அதிகம். குழந்தையின் வளர்ச்சியில் அதன் பிரச்னைகள் பற்றிய அடிப்படை அறிவு இருந்து விட்டால் குழந்தை வளர்ப்பு ஒரு சுமையாக இல்லாமல் சுகமாகவே இருக்கும் என்று கூறும் இந்த நூலின் ஆசிரியர் குழந்தை வளர்ப்புக் கலையில் ஒரு ஸ்பெஷலிஸ்ட். ஒரு வரித் தகவலில் 1000 வரிகளில் குழந்தை வளர்ப்புக் கலையை மிக எளிதாகச் சொல்லி இருக்கிறார். இளம் தம்பதியினருக்குப் பரிசளிக்க ஏற்ற நூல் இது. மொழி பெயர்த்துத் தமிழில் வெளியிட்டால் தமிழ் மட்டுமே தெரிந்த தாய்மார்களும் பலன் பெறுவர்.