/ பொது / இனிய தாம்பத்யம்

₹ 90

ஆசிரியர்- டாக்டர் டி.காமராஜ். பக்கங்கள் : 216.வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018. இல்லறம் என்பது ஆழம் காண முடியாத கடல். தம்பதிகளுக்கு அதன் சூட்சுமங்களைக் கற்றுத் தந்து, வாழ்க்கை பயணத்தை இன்பமயமாக்க உதவும் வழிகாட்டி, இந்நூல். இது உங்கள் கையில் இருந்தால், தாம்பத்யம் மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையே இனிக்கும்.*சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? *முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர் கொள்வது?*தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன?* ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?* கருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? இப்படி இல்லற வாழ்க்கை பற்றி தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து நுணுக்கங்களையும் எளிமையாகக் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியா விலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர்.சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையை போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா- ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை