/ பொது / எமர்ஜென்ஸி நடந்தது என்ன?:
எமர்ஜென்ஸி நடந்தது என்ன?:
ஆங்கில மூலம்: வி.கிருஷ்ணா ஆனந்த். விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 96.)சுதந்திர இந்தியாவில் நடந்த ஒரு சுதந்திரப் போர் பற்றிய ஆய்வும், தெளிவுமாக அமைந்த நூல் இது. அலகாபாத் கோர்ட்டில் தீர்ப்பும் அதை ஒட்டி நடைபெற்ற உச்சகட்ட நடவடிக்கைகளும் அலசப்பட்டுள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் ஆன கதை வரை நூல் அருமையாகச் சொல்கிறது.வி.ஆர்.கிருஷ்ணய்யர், நானி பால்கிவாலா முதலிய நீதித்துறையினர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் முதலிய தேசியத் தலைவர்கள் பலரின் கருத்துரைகளும், அவர்களின் பளிச்சிடும் படங்களும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. நேர்த்திமிக்க வடிவமைப்பு பாராட்டுக்குரியது.அரசியல்வாதிகள் மட்டுமின்றி, எந்தத் தரப்பினரும் படித்துப் பயன் பெறத்தக்க நூல்.