/ கட்டுரைகள் / அந்த நாள் ஞாபகம்

₹ 60

குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144.)நாளேடு ஒன்றில் இந்நூலாசிரியர் "மதுரை வளவன்' என்ற புனை பெயரில் தொடராக எழுதி, வெளிவந்த 50 கட்டுரைகளின் தொகுப்பு நூலாக மலர்ந்துள்ளது. இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மிகாத இக்குறுங்கட்டுரைகள் யாவும் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் அரிய செய்திகளைத் தாங்கியுள்ளன.நூலிருந்து ஒரு சில துளிகள்:""கோழை நான் அல்ல... புறமுதுகில் சுடாதே... நெஞ்சில் சுடு'' என மார்பைத் திறந்து காட்டிய மாவீரன் சாம்பவான் ஓடை சிவராமன் (பக்.21). தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் செய்திடும் அட்டூழியங்களை மேலை நாட்டவர்க்குப் படம் பிடித்துக் காட்டிய ஜெர்மானிய அறிஞர் கார்ல் மார்க்ஸ் (பக்.23).ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர் ஸ்ரீனிவாச சாஸ்திரிகள். (பக்.122)அந்த நாள் சரித்திர ஏடுகளில் படித்தவற்றை ஒரு பத்திரிகையாளருக்கே உரித்தான கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை