/ விவசாயம் / Ancient Irrigation Technology Sluice Technology in Tamilnadu

₹ 250

பழமையான பாசன தொழில்நுட்பம் - தமிழகத்தில் கண்மாய் தொழில்நுட்பம். ஹெரிடேஜ் இந்தியா டிரஸ்ட், 4304, அன்னை நகர், மாதாகோட்டை ரோடு, தஞ்சாவூர் - 613005. தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில், கண்மாய் தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாசனங் கள் தொடர்பாக 1,700 கல்வெட்டுகள் உள்ளன என்றும், அவற்றில் 500க்கும் மேற்பட்டவை குளங்கள் பற்றியும், 169க்கும் மேற்பட்டவை கண்மாய் பாசனங்கள் பற்றியும் தெரிவிக்கின்றன என, ராஜன் தன் புத்தகத்தின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.கண்மாய்கள் பற்றி தெரிவிக்கும் கல்வெட்டுகளில், பாதிக்கும் மேற்பட்டவை புதுக் கோட்டையில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, பாண்டிய நாட்டில் அதிக கல்வெட்டுகள் உள்ளன. ஆனால், ராஜன் தனது ஆழ்ந்த ஆய்வுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தையே தேர்வு செய்துள்ளார்.புத்தகத்தின் முகவுரையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் வெளியேற் றம் குறித்தும் தெரிவித்துள்ளார். அத்துடன் அகழ்வாய்வில் இரண்டு கண்மாய்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறித் தும், அந்தப் பிராந்தியத்தின் வரலாறு குறித் தும், புத்தகத்தின் கடைசிப் பகுதியில் தெரிவித்துள்ளார்.புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தில், பாசனங்கள், தொடர்பான இலக்கிய ரீதியான ஆதாரங்களை, சங்க கால இலக்கியங்கள் முதல் தெரிவித்துள்ளார். மூன்றாவது அத்தியாயத்தில், மடை, மதகு, தூம்பு, கலங்கல், வாய் மற்றும் குமுளி போன்ற தொழில்நுட்ப ரீதியான சில விஷயங்களைப் பற்றி விவரித்துள்ளார். அத்துடன் கண்மாய் குறித்த சில புகைப்படங்களையும் இடம் பெறச் செய்துள்ளார்.இதற்கு அடுத்த அத்தியாயத்தில், குளங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். வண்டல் படிவங்களை அகற்றுதல் மற்றும் கரையை பலப்படுத்துவது குறித்தும் சுருக்கமாக தெரிவித்துள்ளார். கடைசி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயத்தில் தான், புத்தகத்தின் தலைப்பில் இடம் பெற்றுள்ள கண்மாய் தொழில்நுட்பம் குறித்து குறிப்பிட்டுள்ளார். கடைசி அத்தியாயத்தில், தண்ணீர் மேலாண்மை பற்றி விவரித்துள்ளார். அத்துடன் தண்ணீர் உரிமைகள், அதன் வகைகள், சப்ளை மற்றும் மேலாண்மை, வினியோக முறை போன்ற பாசனம் தொடர்பான பல அம்சங்களையும் விளக்கியுள்ளார். இதுதவிர எட்டு அட்டவணைகளும், குறியீடும் பிற்சேர்க்கையில் இடம் பெற்றுள்ளன.நூலின் ஆசிரியர் மிகவும் பொறுமையாக ஏராளமான விவரங்களை சேகரித்து, அவற்றை தொகுத்து கொடுத்துள்ளார். அவரின் இந்தச் செயல் மிகவும் பாராட் டத்தக்கது. அரசின் பொதுப்பணித்துறையினர், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று நிபுணர் கள் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ள பொதுஜனவாசிகள் ஆகியோருக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


புதிய வீடியோ