/ இலக்கியம் / தனிப்பாடல் திரட்டு (இரண்டாம் பாகம்)
தனிப்பாடல் திரட்டு (இரண்டாம் பாகம்)
சாந்தா பதிப்பகம், 15/5, ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 478.)தமிழகத்தில் முன்னர் வாழ்ந்த பல புலவர் பெருமக்களின் தனிப்பாடல்களின் தொகுப்பே இந்நூல். இத்தனிப் பாடல்களின் மூலம் அக்கால மக்களின் சமயம், மரபுகள் மற்றும் பல பல வள்ளல்களின் பெயர்கள், தெய்வங்களின் துதிகள் போன்ற பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம்.பாக்கை வெற்றிலைக்கு முன் போடுவதா, பிற்பாடு போட்டுக் கொள்வதா? (பக்.11), வறுமையை எப்படி வருணிப்பது? (பக்.46), காமத்தின் வலிமை எப்படி (பக்.56) ஆகியன படிக்கச் சுவையாக உள்ளன.பல சிலேடைப் பாடல்களும், அகத்துறைப் பாடல்களும் இந்நூலில் விரவி உள்ளன. செய்யுள்களைப் பொருள் உணர்ந்து படிக்க, கா.சு. பிள்ளையின் எளிய உரை மிகவும் உதவும். தமிழ்க் கவிதை நுகர்வோர்க்கும், மேடைப் பேச்சாளர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும்.