/ பொது / நகரத்தார் மரபும் பண்பாடும்

₹ 250

நகரத்தார் மரபும் பண்பாடும்:ஆசிரியர்: மா.சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு. பாரிமுனை, சென்னை-600018. தொலைபேசி: 25361039. திரைகடலோடியும் திரவியம் தேடியவர்கள், ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்தவர்கள், கல்விப்பணி மற்ற பணிகளில் சிறப்புப் பெற்றவர்கள் நகரத்தார் கள்.செட்டிநாடும், அதன் கிராமங்களும், நகரத்தார் இனம், அயல்நாடுகளில் அறப்பணிகள், தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு என 34 அத்தியாயங்களில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. அதற்கு சிறப்பூட்டும் வகையில் முத்துராமனின் வண்ணப்படங்களும் உள்ளன. இலாபத்தில் இறைவனுக்கு ஒரு பங்கு,கோவிலில் கட்டாயமாகத் திருமணத்தைப் பதிவு செய்யும் மாண்பு, ஆகிய சிறப்புப் பெற்ற இவர்கள் கோட்டை போல வீடுகளையும் கட்டி அதன் பெருமையை "யுனெஸ்கோ' அமைப்பும் அறிய உணர்த்தியவர்கள். பெண்களின் பெயருக்கு பின்னால் "ஆச்சி', தாயை "ஆத்தாள்' என்றழைக்கும் சிறப்பு என்று ஆயிரக்கணக்கான ஆண்டு பெருமையைக் காக்கும் நகரத்தார் மாண்புகள் பல நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. கலாசாரப் பெருமையைக் காட்டும் நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை