/ கதைகள் / அரவான்
அரவான்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு, தனக்குத்தானே ஒருமனிதன் உரையாடிக் கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகாரத்தை எதிர் கொள்வதும், வரலாற்றை, கலாச்சாரப் புனைவுகளைக் கட்டுடைப்பதும், மனப் பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்கு கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின் ஒன்பது நாடகங்கள் கொண்ட தொகுப்பு இது. இந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டபோது மிகுந்த வரவேற்பு பெற்றதோடு சங்கீத நாடக அகாதமியின் தேசிய நாடகவிழாவிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அரவான் நாடகம் மலையாளம் மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.