/ ஆன்மிகம் / இராமனைத் தரிசிப்போம்
இராமனைத் தரிசிப்போம்
கம்பன் கழகம், 12, தாண்டல் கந்தசாமிராஜா தெரு, ராஜபாளையம் -626 117. (பக்கம்: 121) தமிழறிஞர்கள் சா.கணேசன், மு.கு.ஜகன்நாத ராஜா, கம்பராமன், க.வே.ராமநாதன், மா.பா.குருசாமி, அரங்க சீனிவாசன் ஆகியோர் முறையே பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் பகுதிகளில் இராமனின் செயல்களால் அவனுடைய பண்பு நலன்களை ஆராய்ந்து சுவையாக எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இராமனைப் பல்வேறு கோணங்களில் அறிஞர்கள் விளக்குவது, படிப்போருக்கு மிகுந்த இன்பமளிக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.கடந்த 1982ம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த இந்நூல், இரண்டாவது பதிப்பாக தற்போது வந்துள்ளதே நூலின் உயர்வுக்குச் சான்றாகும். அனைவரும் படிக்க வேண்டிய நூல்.