/ கட்டுரைகள் / ஆய்வுக்கதிர் : தொகுதி 1, 2, 3, 4, 5

₹ 80

தமிழாய்வு: கடந்த காலமும் வருங்காலமும் என்னும் பொதுப் பொருளில் நிகழ்ந்த முதன் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. (ஒவ்வொன்றும் 256 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ.80) மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்-608 001.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து நிறுவியுள்ள கல்விசார் அமைப்பு தமிழாய்வு மன்றம், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் கருத்தரங்கக் கட்டுரைகள். அவற்றைத் தொகுத்து "ஆய்வுகளாக ஐந்து தொகுதிகளாக உருப் பெற்றிருக்கிறது.தமிழிலும் ஆங்கிலத்திலும் 460 ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லா தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை அளித்து அசத்தி விட்டனர் ஆய்வாளர்கள்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை மாணவர்கள் பன்னாட்டு மாணவர்களைக் கொண்டு மாணாக்கர்களுக்கு நடத்தும் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒளிவீசும் மணிக் கதிர்களின் அணிவகுப்பாக அழகுற வருகிறது இந்த ஆய்வுக்கதிர்- என சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் வ.ஜெயதேவனால் பாராட்டப் பெற்ற தொகுதிகள் இவை.இத்தொகுதிகள் ஆய்வுக் கடல். அனைவரும் இத்தொகுதியில் மூழ்கி முத்தெடுக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை