/ ஆன்மிகம் / மனிதனும் பிரபஞ்சமும்

₹ 20

ஷ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 116) சென்னை ஷ்ரீராமகிருஷ்ண மடத்தை ஆரம்பித்து வைத்து அதன் முதல் தலைவராக விளங்கிய சுவாமி ராமகிருஷ்ணானந்தர் (சசி மகராஜ்) ஆற்றிய ஆறு சொற்பொழிவுகளின் மொத்தத் தொகுப்பு இந்த நூல். பிரபஞ்சத்தைப் பற்றிய முழு உண்மைகளை விஞ்ஞானம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பிரபஞ்சம் இருக்கும் விதத்தைப் புதுப்புது கொள்கைகளாலும், கணித சூத்திரங்களாலும் விவரிக்க முற்படுகிறதே தவிர, ஏன் பிரபஞ்சம் அப்படி இருக்க வேண்டும். ஒன்றுமில்லாமல் இருப்பதற்குப் பதில் ஏன் என்னென்னவோ இருக்கின்றன அல்லது இருப்பது போல் தெரிகின்றன. இதுபோன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விஞ்ஞானிகளால் விடை இன்னும் காண முடியவில்லை என்பதே உண்மை. ஆனால், விடை காண வேண்டும் என்று தாகத்தோடு தேடுவோருக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக உதவக்கூடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை