/   பொது / திரையுலக மேதை சார்லி சாப்ளின்                      
திரையுலக மேதை சார்லி சாப்ளின்
சாந்தி பதிப்பகம், 27, அண்ணாசாலை, சென்னை-2. சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தவர் சார்லி சாப்ளின். இவர் தொட்ட புகழின் சிகரங்களை, வேறு எந்தத் திரை உலகப் பிரமுகரும் தொட்டதில்லை. சார்லி சாப்ளின் படங்களின் தாக்கம் உலகெங்கும் எல்லா மொழிப் படங்களிலும் பரவி உள்ளது. இவருடைய நடை, உடை, மீசை, நகைச்சுவை எல்லாமே இன்றைய அளவிலும் நம் நாட்டில் உருவாக்கப்படும் படங்களில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கின்றன.ராண்டார்கை சிறப்பாக எழுதி இருக்கிறார். சாப்ளின் வரலாற்றைச் சொல்லுவதோடு, அவரது திரைப்படங்கள் குறித்தும் இந்த நூல் விரிவாக பேசுகிறது. அருமையான புகைப்படங்களும் இந்த நூலில் இருக்கின்றன. சினிமாப் பொக்கிஷம்!







 
 
      