/ இலக்கியம் / சிறுவர்களுக்கு சிலப்பதிகாரம்
சிறுவர்களுக்கு சிலப்பதிகாரம்
சுரா புக்ஸ் (பி) லிட்., 1620, `ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 112.)தமிழன்னையின் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலனாகவும், பெண்ணின் பெருமை பேசும் புரட்சி காப்பியமாகவும் விளங்குவது சிலப்பதிகாரம்.இயற்றமிழின் செறிவும், இசைத் தமிழின் இனிமையும், நாடகத் தமிழின் நளினமும் கொண்ட முத்தமிழ் காப்பியமாக சிலப்பதிகார கதையை சிறுவர் - சிறுமியர் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு புரியும் வகையில் எளிமைப்படுத்தி கொடுத்துள்ளார் நூலாசிரியர்.இந்நூல், சிறுவர் - சிறுமியர் ஆர்வத்துடன் படிக்கும் வகையில் அமைந்திருப்பதோடு, எதிர்காலத்தில் அவர்கள், சிலப்பதிகார காப்பியத்தை முழுவதுமாக படித்து, இன்புறவும் தூண்டுகோலாக அமையும்.