அரங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-600 078. (பக்கம்: 108. ).தமிழ் உரைநடை வளர்ச்சியில் நாட்குறிப்புகளுக்குத் தனி இடம் உண்டு. 16ம் நூற்றாண்டில் குறிப் பாகப் போர்த்துக்கீசியர் வருகைக்குப் பின்னர் பேச்சுத் தமிழில் உடை நடை தோன்றியது. பிரெஞ்சுக்காரர்கள் வருகைக்குப் பின்னர் புதுடில்லியில் தமிழில் நாட்குறிப்புகள் தோன்றலாயின. நாட்குறிப்புகள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள் தாம். அந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் தம்பி குமாரர்கள் தான் அரங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை.இவர் தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஆனந்தரங்கப் பிள்ளையால் வளர்க்கப்பட்டுப் பின்னர் புதுச்சேரியில் மிகப் புகழ் பெற்று விளங்கியவர். இவரது நாட் குறிப்புகள் மூலம் அப்போதைய பொருளாதாரம், சமூகம், அரசியல், வாணிபம் தொடர்பான பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. பிற மொழிச் சொற்களின் கலப்புத் தமிழ் நடைக் கொண்டு விளங்கும் இந்த நாட் குறிப்புகள் தமிழில் மொழியியல் ஆய்வுக்குப் பெரிதும் உதவும்.