/ ஆன்மிகம் / தேவாரத் திருஉலா
தேவாரத் திருஉலா
(பாகம்-2)விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 272) தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற ஈசனின் திருத்தலங்களான குரங்கணில் முட்டம் தொடங்கி திருப்புத்தூர் வரையிலான 16 தலங்களில் வீற்றிருக்கும் முக்கண் முதல்வனின் கோவில்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். தல வரலாறு, கோவிலின் சிறப்புக்கள், கட்டடக் கலைநுட்பம், சிற்ப வேலைப்பாடுகள் ஆகிய விவரங்களுடன் கோவிலின் புகைப்படங்கள், நல்ல தாளில் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலில் பக்தி உணர்வு அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.