/ வாழ்க்கை வரலாறு / தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்
தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய தகவல் களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். கலைவாணர் பட்டம் எப்போது யாரால் எங்கு கொடுக்கப்பட்டது என்ற தகவல் உள்ளது. அவரது வள்ளல் தன்மை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வருமான வரி அதிகாரி கேள்வியும், அதற்கு கிடைத்த பதிலும், பின் நடந்த சம்பவமும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. பாகவதர் விடுதலைக்காக நடந்த முயற்சிகள் விரிவாக உள்ளன. நடிகர் சங்கம் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்ற அரிய தகவல் உள்ளது. கலை நிகழ்ச்சிகள் நடத்தி உதவிய தகவல்கள் ஏராளமாக உள்ளன. கலைவாணர் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தெளிந்த சிந்தனையாளர் என எடுத்துரைக்கும் அற்புத நுால். – டாக்டர் கார்முகிலோன்