/ அரசியல் / சீனா – அண்ணன் தேசம்

₹ 100

அதிக மக்கள் தொகையும், மிகப் பெரிய நிலப்பரப்பும் கொண்ட சீனாவை, நாம் அனைவரும் ஒரு கம்யூனிச நாடு (செஞ்சீனா) என்ற அளவில், மட்டும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சிறிய புத்தகத்தைப் படித்து முடித்த பின், நமக்கு சீனாவைப் பற்றிய பல அரிய, சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன. குறிப்பாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை மற்றும் முதியோர்களைப் போற்றி மகிழும், குடும்பத்து இளந் தலைமுறையினர் பற்றிய விஷயத்தையும் பற்றிச் சொல்ல வேண்டும். பெற்றோர் சம்மதமில்லாமல் அங்கு ஒருவரும், காதல் வயப்பட்டிருந்தாலும் கூட, திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவல் வியப்பூட்டுகிறது.ஆனால், அவர்களிடையே நிலவிவரும் மூடநம்பிக்கை (சென்டிமென்ட்) குறித்த தகவல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சீனா குறித்து, பல அரிய தகவல்களுடன் கூடிய இந்தப் புத்தகம், நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது. நூலாசிரியை பாராட்டுக்குரியவர்.ஜனகன்


முக்கிய வீடியோ