/ மருத்துவம் / குளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப அதிசயங்கள்
குளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப அதிசயங்கள்
மருத்துவத் துறையில் வளர்ந்து வரும் குளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப செய்திகளை தந்துள்ள நுால். குளோனிங் முறையில் குழந்தை உருவாக்கும் அதிசயத்தை பேசுகிறது. இந்த முறை வந்தால் மானிட வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும்; நாம் பின்பற்றும் கோட்பாடு, நீதி நெறிகள் என்னாவது என எதிர்ப்போர் கருத்தும் பதிவாகியுள்ளது. அதேநேரம் ஆஸ்துமா, ஒவ்வாமை, புற்று நோய் அணுகாத குழந்தை பற்றி பிரஸ்தாபிக்கிறது.மிகச்சிறிய ரோபாட் தயாரித்து உடலுக்குள் செலுத்தி நோய் மூலக்கூறை கண்டறியும் செய்திகளும் உள்ளன. இவை சில காலத்திலேயே நிறைவேறும் சாத்தியத்தையும் தெரிவிக்கிறது. எளிய நடையில் அறிவியல் விந்தையை தரும் நுால்.– புலவர் சு.மதியழகன்