/ வரலாறு / தமிழரின் முழுமையான வரலாறு

₹ 280

தமிழர் வரலாற்றை விளக்கும் நுால். அரசியல், இலக்கியம், சமுதாய வரலாறு என மூன்று பாகங்களாக அமைந்துள்ளது. மனிதன், உலக தோற்றத்தை அறிவியல் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது. தொல்பழங்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறது. கடல் கோளால் அழிந்து போன கண்டங்கள் பற்றி தெரிவிக்கிறது. கடைச்சங்க கால மன்னர்களை வரிசைப்படுத்துகிறது. சேர, சோழ, பாண்டியர் வரலாற்றை விவரிக்கிறது. தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களையும் விவரிக்கிறது. சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பற்றி தெரிவிக்கிறது. ஐம்பெருங்காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றி தெரிவிக்கிறது. தற்கால எழுத்தாளர்கள் பற்றிய விளக்கத்தையும் தருகிறது. பல பார்வைகளை உள்ளடக்கிய நுால்.– புலவர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி